Posts

Showing posts from May, 2022

சம்பங்கி

சம்பங்கி பூ வளர்ப்பு மற்றும் பயன்கள் சம்பங்கி பூக்கள் பூஜைக்கு ஏற்றது. சம்பங்கி பூக்களை தலையில் சூடிகொள்வதால் மனதிற்கு அமைதியையும், இதமான மனநிலையையும் கொடுக்கிறது. சம்பங்கி பூக்கள் அவ்வளவு சீக்கிரம் வாடாது. இதன் சாறு நறுமண பொருட்கள் தயாரிப்பதில் பயன்படுகிறது.  மருத்துவ சிகிச்சை முறைகளில் எண்ணற்ற முறைகள் உள்ளது. இதில் மலர்களை பயன்படுத்தும்  அரோமாதெரபி  மிகவும் பிரபலமாகி கொண்டு வருகிறது. அரோமா தெரபியில் இடம்பெறும் மலர்களில், நறுமணமிக்க சம்பங்கி தான் முதன்மையான இடத்தை பெறுகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை ஆயிரம் ஹெக்டேருக்கு அதிகமாகவே, சம்பங்கி பயிரிடப்படுகிறது.  விவசாயிகளுக்கு நல்ல லாபம் தரும் பயிர் தான் சம்பங்கி வளர்ப்பு. சம்பங்கி அதிக அளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. சம்பங்கி வகைகள்:       சம்பங்கியில் பல வகைகள் உள்ளது.  நிலச்சம்பங்கி அகச்சம்பங்கி காட்டுசம்பங்கி கொடிசம்பங்கி நாக சம்பங்கி சிறு சம்பங்கி இவற்றுள் அதிக மருத்துவ பயன்களை கொண்டது நில சம்பங்கி தான். அதனால்தான் நில சம்பங்கி அதிகமாக பயிரிடப்படுவதும், எளிதில் கிடைக்கக்கூடியதுமாக ...